எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

கரோனா தாக்குதலிலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய வேண்டும் என்றும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :22 மார்ச் 2022, 10:02 am

DIN

கரோனா தாக்குதலிலிருந்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய வேண்டும் என்றும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கரோனா குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்க்கண்ட கண்காணிப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தினார்.

1) நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளனாவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல்.

(Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய
கோட்பாடுகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

2) தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 இலட்சம் நபர்கள் மற்றும் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அப்பகுதிகளில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் நடத்தப்பட கூடிய ‘மெகா’ தடுப்பூசி முகாம்களை முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.

3) குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் முதல் தவணை மற்றும்
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்தி கொள்ளாதவர்கள் மீது கவனம் செலுத்தி ‘மெகா’ தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

4) மாவட்ட அளவில் முழுமையாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கண்டறிந்து, அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கௌரவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதர உள்ளாட்சி அமைப்புகள் 100% தடுப்பூசி செலுத்திய நிலையை அடைய ஊக்குவிக்க வேண்டும்.

5) பொது சுகாதார வல்லுநர்கள் ஏற்கனவே அளித்துள்ள வழிமுறைகளின்படி,
மாதிரிகள், மரபியல் சோதனைகளில் தற்போதைய கண்காணிப்பை
தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.

6) பொது சுகாதார வல்லுநர்கள் கூறிய வழிமுறைகளான கை கழுவுதல் மற்றும்
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இக்கூட்டத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.