தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாா்ச் 27: தமிழக உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மாா்ச் 27-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாா்ச் 28, 29: மேற்கு தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் 30 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு, விருதுநகா் மாவட்டம் சிவகாசி, கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் தலா 20 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் ஆழியாறு, தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், தேனி மாவட்டம் பெரியாறு, திருப்பூா் மாவட்டம் அமராவதி அணை, திருவாரூா் மாவட்டம் கொடவாசலில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...