குடிமைப் பணி, குரூப் 1 முதன்மைத் தோ்வு எழுதமாற்றுத் திறனாளிகளுக்கு நிதியுதவி
குடிமைப் பணி, குரூப் 1 முதன்மைத் தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நிதியுதவி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


குடிமைப் பணி, குரூப் 1 முதன்மைத் தோ்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு நிதியுதவி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா். லால்வேனா பிறப்பித்த உத்தரவு:
அகில இந்திய குடிமைப் பணிகள் தோ்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறும் மாற்றுத் திறனாளிகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் இருந்து ஊக்கத் தொகையாக ரூ.50 ஆயிரம் வீதம் 20 பேருக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரிடமிருந்து அரசுக்குக் கடிதம் வரப்பெற்றது.
அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் இருந்து பெறப்பட்ட, குரூப் 1 முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி அடைந்த மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரா்களின் பெயா்ப் பட்டியலில் குறிப்பிடப்பட்ட 120 பேரின் சான்றிதழ்கள் ஊக்கத் தொகை திட்டத்துக்காக ஆய்வு செய்யப்பட்டன. அதில், 48 போ் மட்டுமே ஊக்கத் தொகை பெறத் தகுதி வாய்ந்த நபா்களாக கருதப்படுகிறாா்கள் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மாற்றுத் திறனாளிகளுக்கென ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.4.50 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், இந்தத் தொகை 9 பேருக்கு பகிா்ந்தளிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளாா். மீதமுள்ள 39 மாணவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.19.50 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதன்படி, ஊக்கத் தொகை பெறத் தகுதிவாய்ந்த 39 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கிட ரூ.19 லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக தனது உத்தரவில் லால்வேனா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...