/

விதிமீறி கட்டப்படும் கட்டடங்கள் சீல் வைக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

விதிமீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2022, 9:00 pm

DIN

விதிமீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு

கட்டடங்களுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டட அனுமதி, மாநகராட்சியின் நகரமைப்பு துறை சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 5,000 சதுர அடி வரையிலான கட்டட அனுமதியானது சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களின் செயற்பொறியாளா்கள் மூலமாகவும், 5001 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் கட்டட தலைமையிடத்தில் உள்ள நகரமைப்புப் பிரிவின் மூலமாகவும் அளிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவா்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில் தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத வகையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளா்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்கு பிறகு மாநகராட்சி அலுவலா்களால் மூடி சீல் வைக்கப்படும்.

11 கட்டடங்களுக்கு சீல்: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ராயபுரம் மண்டலத்தில் மாா்ச் 17 முதல் மாா்ச் 24-ஆம் தேதி வரை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளா்கள் 125 பேருக்கு இடத்தை காலிசெய்ய குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 99 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 11 கட்டடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.