இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு உதவ மத்திய அரசு அனுமதிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கா், முதல்வா் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசு மூலமே இலங்கைக்கு உதவிகளை வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளாா். முன்னதாக தீர்மானம் தொடர்பாகவும் முதல்வர், அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து, இலங்கை மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவித்து அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
'இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தனிப்பட்ட முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மனிதாபிமான செய்கை அனைவராலும் பெரிதும் வரவேற்கப்படும் மற்றும் நாடுகளுக்கு இடையே புரிதல் மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தியாவை சீனா, அமெரிக்கா தாக்கினால் ராகுலின் ஆன்மா சாந்தியடையும்: நிஷிகாந்த் துபே

விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய சர்க்கரை ஆலையில் டெக்னீசியன் பணி!
ஜன நாயகன் ஒப்பந்தம் ரத்து? ரூ. 120 கோடி திருப்பிக் கேட்கும் ஓடிடி நிறுவனம்!!

நீண்ட வரிசை! பணியாளர்களுடன் வாக்குவாதம்! நிரம்பி வழியும் பெட்ரோல் நிலையங்கள்!
வீடியோக்கள்

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

