ஆவடியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி
ஆவடியில் விஷவாயு தாக்கியதில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.


ஆவடியில் விஷவாயு தாக்கியதில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
ஆவடி, பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகரில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்நிலையில் வியாழன்கிழமை அடுக்குமாடிக் குடியிருப்பில் தரைதளத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி பருத்திபட்டு கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (35), அதே பகுதி அய்யன்குளத்தை சேர்ந்த முத்து(25) ஆகியோர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் குணசேகரனை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொண்டு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து விரைந்து வந்து ஆவடி போலீஸார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...