பட்டணப் பிரவேச நிகழ்வு குறித்து முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் சேகர்பாபு
சென்னை: தருமபுர ஆதீன பட்டிண பிரவேச நிகழ்வு குறித்து முதல்வர் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை எடுப்பார் எனவும், ஆதீனதுக்கு பல்லக்கு தூங்குவதை விட்டு, நியாயத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பல்லக்கு தூக்க வேண்டும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் மண்டல இணை ஆணையர்களுக்கு வாக்கி டாக்கிகளை வழங்கினார்.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட துறை சார்ந்த உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
முதற்கட்டமாக 20 மண்டல இணை ஆணையர், இரண்டு கூடுதல் ஆணையர், இணை ஆணையர்களுக்கு 100 வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மானிய கோரிக்கையில் 112 அறிவிப்புகள் வெளியிட்டத்தில் 1690 பணிகளை மேற்கொள்ளபட்டுள்ளன.
குறிப்பாக கணினி வழியில் பூஜைகளை முன்பதிவு செய்வது, திருக்கோயிலின் 4 கோடி ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது போன்ற அறிவித்ததை விட 200 பணிகள் கூடுதலாக மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போது மானிய கோரிக்கையில் 160 க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் வெளியிடபட்டுள்ளது. 2,244 பணிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகளை 24 மணிநேரமும் இயக்க இந்த வாக்கி டாக்கி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சி 22 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விவகாரம் தொடர்பான நல்ல சூழல் உருவாகும் எனவும், தமிழகத்தின் மூலவரகாவும், உற்சவராகவும் முதல்வர் திகழ்கிறார். பட்டணப் பிரவேச விவகாரத்தில் அனைவருக்கும் உகந்த நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் தெரிவித்தார்.
பட்டணப் பிரவேச நிகழ்வில் நானே பல்லக்கு தூக்குவேன் என்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், அண்ணாமலை யாருக்கும் பல்லக்கு தூக்க கூடாது, நியாயத்திற்கு பல்லாக்கு தூக்க வேண்டும் என்றார்.
திருசெந்தூர் கோயிலில் 1000 ரூபாய் பணம் வாங்கி கொண்டு பக்தர்களை சாமி தரிசனதுக்கு அர்ச்சகர் ஒருவர் அனுப்பும் நிகழ்வு நடைபெற்று உள்ளது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் உள்ள பழமையான கோயில் வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் அந்த கோயில் குளம் சிதிலமடைந்து காணப்படுவதால் சீரமைப்புப் பணிகள் இந்த மானிய கோரிக்கையில் சீர்செய்யப்படும் எனவும், இரண்டு தினங்களில் ஆணையருடன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் பெரியபாளையம் கோயிலில் உள்ள 2 புத்துக் கோயில் உள்ளன. இந்த இடத்தில் வருகை தரும் திருமண தாரர்கள் நபர்களிடம் இருந்து ரூ.10,000 அதிகப்படியான கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் சிதம்பரம் நடராஜர் கோயிலை தனிசட்டம் இயற்றி அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற மார்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு கையக்கப்படுத்துவதற்காக தனிசட்டம் இயற்றுவது தொடர்பாக , சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.