குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தேர்வுக்குப் பயந்து பிளஸ் 2 மாணவன் தீக்குளித்து தற்கொலை: தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சோகம்

தேர்வுக்குப் பயந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் சஞ்சய்
Updated On :6 மே 2022, 5:39 am

DIN

தேர்வுக்குப் பயந்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட புல்லமுத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிபாபு-உஷாராணி என்ற தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மகன் சஞ்சய் பொதுத் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், தேர்வு பயம் காரணமாக நேற்று அவனியாபுரத்தில் உள்ள தனது தாய் மாமன் வீட்டில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

சஞ்சயின் அலறல் சத்தம் காரணமாக இதனைப் பார்த்த தாய்மாமன் ராஜபாண்டி உடனடியாக தனது மருமகனை காப்பாற்ற முயன்றார். அதற்குள் தீ உடல் முழுவதும் பரவி காப்பாற்ற முயன்ற ராஜபாண்டிக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவன் சஞ்சய் உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற ராஜபாண்டி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில். தனது மகன் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டு இறந்த தகவலை கேள்விப்பட்ட பழனி பாபு புல்லமுத்தூரில் உள்ள தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் இறந்த சோகம் தாளாமல் தந்தையும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் புல்லமுத்தூர் கிராமத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளும் காவல் துறையும் கூறியபோது, மாணவர்கள் தேர்வுக்கு பயந்து இதுபோன்ற முயற்சிகளில் இறங்க அவசியமில்லை. தேர்வு என்பது மிக முக்கியம் தான். ஆனால். அதுவே வாழ்க்கை அல்ல. தேர்ச்சி பெற இயலாவிட்டால் அடுத்தடுத்து அவர்களுக்கு வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்த்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு தேர்வு குறித்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்க வேண்டுமே தவிர அச்ச உணர்வை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.