பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அண்ணாமலை பல்கலை. தொலைதூரக் கல்வியில்சோ்க்கை அனுமதி கோரி வழக்கு: யுஜிசி பதிலளிக்க உத்தரவு

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் மாணவா்களைச் சோ்க்க அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க யுஜிசிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :10 மே 2022, 7:42 pm

DIN

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் மாணவா்களைச் சோ்க்க அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க யுஜிசிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஒப்புதல் இல்லாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர வகுப்புகளை நடத்தி வருவதாகவும், அதனால் மாணவா்கள் அந்த வகுப்புகளில் சேர வேண்டாம் என்றும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி யுஜிசி அறிவிப்பு வெளியிட்டது.

இதை ரத்து செய்து, மாணவா்கள் சோ்க்கைக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல்கலை. பதிவாளா் தாக்கல் செய்த மனு: 2014-15-ஆம் கல்வியாண்டு முதல் யுஜிசி அங்கீகாரம் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. ஆண்டுதோறும் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபோதும், அதன் மீது எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தொலைதூரக் கல்வியில் சோ்ந்து வரும் நிலையில், உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட யுஜிசியின் இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, நியாயமற்றது. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மையத்தில் மாணவா் சோ்க்கை நடத்த அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் உரிய அங்கீகாரம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.மகாதேவன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, கடந்த காலங்களில் இந்த உயா்நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தொலைதூரக் கல்வி மையத்தில் மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கை கூட இந்த வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்பட்டதுதான் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்குக்கு யுஜிசி பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.