தேர்தல் அறிக்கையில் இருந்து திமுக நழுவுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாத நிகழ்வுகள் நிறைவடைந்த நிலையில், தேனி மாவட்டத்திற்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்விக்கு,
தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக்கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதியத் திட்டம் குறித்து திமுகவிடம்தான் கருத்துக் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு, 'ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது' என்று பதில் அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி கூட்டணி ஆட்சியில் அதிமுக- அன்பழகன் உறுதி

எம்எல்ஏ விடுதி பராமரிப்புப் பணி ஒப்பந்தப்புள்ளி: நடவடிக்கைகளைத் தொடர உயா்நீதிமன்றம் அனுமதி

விளங்குளம் அட்சயபுரீசுவரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

‘முத்தமிழறிஞா் கலைஞா் அரங்கம்’: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

