ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காடு அனுமந்தராய சுவாமி திருகோயில் தேரோட்டம்: வெகு விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

News image
காடு அனுமந்தராய சுவாமி திருகோயில் தேரோட்டம்
Updated On :15 மே 2022, 9:05 am

DIN


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான அருள்மிகு காடு அனுமந்தராய சுவாமி திருக்கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு  விமர்சையாக நடைபெற்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில்  உள்ளது அருள்மிகு ஸ்ரீ காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் . 500 ஆண்டுகளுக்கு முன் வனப்பகுதியாக இருந்த இன்றைய தாராபுரத்தில் ஸ்ரீ வியாசராயர் சுவாமிகள் இந்தியா முழுவதும் 732 ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து இருந்தார், இதில் 89 ஆவது மூர்த்தியே தாராபுரம் ஆஞ்சநேயர். 

பொதுவாக சீதாராமர் திருக்கோயில்களில் மூலமூர்த்தியாக சீதாராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகள் இருப்பது வழக்கம், ஆனால் தாராபுரத்தில் ஏழு அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோயிலில் தனி சிறப்பு. 

Story image

திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

அருள்மிகு ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம் இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேல் கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே இருப்பது இங்கு மட்டுமே.

இக் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து துளசி மாலை சார்த்தி ஆஞ்சநேயப் பெருமானே உள்ளம் உருக வேண்டிக் கொண்டாள் திருமணத்தடை உள்ளவர்களுக்கு சுபகாரியங்கள் விரைவில் நடைபெறும் என்பதும், கல்வி கேள்விகளில் அவர்கள் சிறந்து சிறந்து விளங்குவார்கள் என்பதும், தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் அது சுபிட்சம் அடையும் என்பதும் தனிச்சிறப்பு.
 
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஆண்டு தேர்வடம் பிடிப்பு நிகழ்ச்சி கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆஞ்சநேய சுவாமிகளுடன் உற்சவ மூர்த்திகளான சீதாராமர் சிலைகள் பக்தர்கள் புடைசூழ திருத்தேருக்கு எடுத்துவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் திருத்தேரை பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் கல்யாணராமர் கோயில் வீதியில் நிறுத்தப்பட்டது.

புகழ்பெற்ற தாராபுரம் ஸ்ரீ காடு அனுமந்தராய திருக்கோயிலில் நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.