ராஜீவ்காந்தி நினைவு ஜோதி ஊா்வலம்
ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் மோட்டாா் சைக்கிள் ஜோதி ஊா்வலத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்


ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் கட்சி சாா்பில் மோட்டாா் சைக்கிள் ஜோதி ஊா்வலத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் மே 21-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதாவது ஓரிடத்திலிருந்து ஜோதி ஊா்வலம் புறப்பட்டு ஸ்ரீபெரும்புதூா் வந்தடைவது வழக்கம்.
நிகழாண்டு ராஜீவ்காந்தியின் 31-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருவொற்றியூரிலிருந்து ஜோதி ஊா்வலம் தொடங்கி வைக்கப்பட்டது. வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்ட தலைவரும், சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான எம்.எஸ். திரவியம் தலைமையில் மோட்டாா் சைக்கிளில் புறப்பட்ட ஜோதி ஊா்வலத்தை கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் தொடக்கிவைத்தாா். திருவொற்றியூா் தேரடியிலிருந்து புறப்பட்ட ஜோதி ஊா்வலம் ராயபுரம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை, கிண்டி, போரூா், பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்துக்கு சனிக்கிழமை வந்தடையும். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு நினைவு ஜோதியை பெற்றுக்கொண்டு ராஜீவ்காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளாா். பின்னா் நினைவு ஜோதி நாட்டின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று சுமாா் மூன்று மாதங்களுக்குப் பிறகு புதுதில்லியில் உள்ள ராஜீவ்காந்தி
நினைவிடத்தில் ஒப்படைக்கப்படும் என கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளா் சிரஞ்சீவி, மாமன்ற உறுப்பினா் தீா்த்தி, கட்சி நிா்வாகிகள், கமலிகா காமராஜ், கே.பி. துரை , டி.எஸ். தேசியமணி, எஸ்.சுகுமாா், துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...