அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

News image
Updated On :1 நவம்பர் 2022, 7:57 am

DIN

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாவட்டங்களில் நடைபெற்றும் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆட்சியர்களிடம் முதல்வர் பேசியதாவது:

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயாராக இருக்க வேண்டும். மிக கனமழை பெய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்டு முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பை முன்னதாகவே தருவதை உறுதி செய்ய வேண்டும்.

சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தொலைபேசி, வாட்ஸ்ஆப் வாயிலாக வரக்கூடிய புகார்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும். பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை கண்டறிந்து அப்புறுப்படுத்த வேண்டும்.

வெள்ளம் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர்களின் பொறுப்பு. மழைக்காலம் சவாலான காலம், அதை மக்களுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.