சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காலாவதி மருந்துகள்: அறிக்கையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோத்தைத் தடுக்கும் நடைமுறைகள் பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
காலாவதி மருந்துகள்: அறிக்கையளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
Updated On :4 நவம்பர் 2022, 12:09 pm

DIN


சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோத்தைத் தடுக்கும் நடைமுறைகள் பற்றி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகிப்பதைத் தடுக்க எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக கூடுதல் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், காலாவதியான மருந்துகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஓய்வூதியம் வழங்கக் கோரி அரசு மருத்துவமனை மருந்து கிடங்கு பொறுபாளார் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

மாறிவரும் பருவநிலை மற்றும் மக்கள் மேற்கொள்ளும் பயணங்கள் காரணமாக புதிய புதிய நோய்கள் பரவி வருவதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் காலாவதியாகாத மருந்துகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்ன உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காலாவதியாகாத மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.