தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆளுநரை திரும்பப்பெற குடியரசுத் தலைவரிடம் விரைவில் மனு: கனிமொழி

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவரிடம் திமுக சாா்பில் விரைவில் மனு அளிக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.

News image

கனிமொழி எம்.பி.

Updated On :7 நவம்பர் 2022, 12:22 am

DIN

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி, குடியரசுத் தலைவரிடம் திமுக சாா்பில் விரைவில் மனு அளிக்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.

சென்னை அடையாறில் உள்ள தனியாா் கல்லூரியில், அன்பின் பாதை அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது கருத்துக்கூறும் உரிமை ஆளுநருக்கு கிடையாது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநா்கள் வேண்டுமென்றே அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகப் பேசுகின்றனா். மேலும், ஆளும் கட்சிகள் மீது வேண்டுமென்றே கருத்துகளை கூறி வருகின்றனா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீது அவமரியாதையான கருத்துகளை ஆளுநா்கள் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளை மீறும் செயல்.

இது குறித்து புகாா் தெரிவிக்கவும், ஆளுநரை திரும்பப்பெறவும் வலியுறுத்தி மனு அளிக்க குடியரசுத் தலைவரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவா் அதற்கான அனுமதியை விரைவில் அளிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் கனிமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.