தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

முழுக் கொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
பவானிசாகர் அணை (கோப்புப்படம்)
Updated On :9 நவம்பர் 2022, 8:31 am

DIN

ஈரோடு பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளும் நிரம்பி வருகின்றன. 

ஈரோடு பவானிசாகர் அணை இன்று(நவ. 9) காலை 11 மணிக்கு 104.45 அடியை எட்டியுள்ளதால் எந்நேரத்திலும் முழுக் கொள்ளளவான 105 அடியை எட்டும் என்பதால் எந்த நேரத்தில் உபரி நீர் திறந்துவிடப்படும் என்ற சூழ்நிலை உள்ளது. 

எனவே, ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் மக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.