2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்: பிரதமர்

கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 நவம்பர் 2022, 12:01 pm

DIN

கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்றனர். விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி; காந்தியின் முக்கிய குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான். 

கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின்சக்தி பயன்பாடு 24% அதிகரித்துள்ளது. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். 

மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்கு காரணம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். 

பிரதமர் மோடி வருகையையொட்டி திண்டுக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.