சாலைவழி மதுரை செல்கிறார் பிரதமர் மோடி
காந்திகிராம பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சாலைவழி மதுரைக்கு புறப்பட்டார்.


காந்திகிராம பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சாலைவழி மதுரைக்கு புறப்பட்டார்.
திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 36ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்றனர். விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி வழங்கினார்.
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி சாலைவழி மதுரைக்கு புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்து பிரதமர் மோடி, மதுரைக்கு காரில் புறப்பட்டார். முன்னதாக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தார் மோடி.
திண்டுக்கல்லில் அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...