டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குழந்தைகள் செல்போனை தவிர்க்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவியர் பேரணி

மணப்பாறையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் செல்போனைத் தவிர்க்க வலியுறுத்தி விண்மதி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் பேரணி சென்றனர். 

News image
Updated On :14 நவம்பர் 2022, 10:05 am

DIN

மணப்பாறையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் செல்போனைத் தவிர்க்க வலியுறுத்தி விண்மதி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ, மாணவியர் பேரணி சென்றனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு விண்மதி மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் குழந்தைகள் செல்போனைத் தவிர்க்க வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

பேரணியை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். வாகைக்குளம் பகுதி பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி, விராலிமலை சாலை, கோவில்பட்டி சாலை, புதுத்தெரு வழியாக பேருந்து நிலையம், பெரியார் சிலை சென்று பின் மீண்டும் பள்ளியை அடைந்தது.

இதில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, குழந்தைகள் செல்போனைத் தவிர்க்க வேண்டும், குடும்பத்துடன் நேரத்தை செலவிட வேண்டும், மைதானத்தில் விளையாட வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை கைகளில் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.