தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கனமழை எச்சரிக்கை: மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க அரசு உத்தரவு

கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image

தமிழக அரசு

Updated On :19 நவம்பர் 2022, 5:24 am

DIN

கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கையையொட்டி மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயாராக இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.