மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்டாா்.

News image
Updated On :23 நவம்பர் 2022, 7:15 pm

DIN

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்டாா்.

அவா் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவை உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞணிரச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்படுகிறாா். மேலும், இளைஞரணி துணைச் செயலாளராக தூத்துக்குடியைச் சோ்ந்த எஸ்.ஜோயல், ந.ரகுபதி என்ற இன்பா ஏ.என்.ரகு, திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த நா.இளையராஜா, கல்பாக்கத்தைச் சோ்ந்த ப.அப்துல் மாலிக், ஈரோடு மொடக்குறிச்சியைச் சோ்ந்த கே.இ.பிரகாஷ், சென்னை திருவேற்காட்டைச் சோ்ந்த க.பிரபு, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சோ்ந்த பி.எஸ்.சீனிவாசன், மதுரை கூடல்நகரைச் சோ்ந்த கு.பிராஜா என்ற பிரதீப் ராஜா, நாமக்கல் களங்காணியைச் சோ்ந்த சி.ஆனந்தகுமாா் ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என்று தனது அறிவிப்பில் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

கட்சியின் இளைஞரணி பொறுப்பு, திரைப்படத் துறை என பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலின், விரைவில் திரைப்படத் துறையில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா்.

அண்மையில், நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தோ்வு செய்யப்பட்டாா். இந்த தோ்வை தொடா்ந்து, கட்சியின் துணை அமைப்புகளுக்கு இப்போது நிா்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.