தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு!

மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,511 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,051 கன அடியாக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 நவம்பர் 2022, 4:08 am

DIN

மேட்டூர்: காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,511 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,051 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், நேற்று மாலை 119.55 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 119.38அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 92.48 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.