தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

News image
Updated On :28 நவம்பர் 2022, 8:03 am

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், வெள்ளி பூத வாகனம், தங்ககுதிரை, காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

விழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக டிச.5-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 8 மணிக்கு கோயில் 6 கால் மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு செங்கோல், சேவல்கொடியுடன் பட்டாபிஷேகம் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிச.6-ஆம் தேதி காலை 11 மணிக்கு காா்த்திகை தேரோட்டம் நடைபெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த தேரோட்ட திருவிழா இந்தாண்டு விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளது. 

அன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக காா்த்திகை தீபத் திருவிழாவிற்கான தேங்காய் தொடு முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயில் ஸ்தானிகப்பட்டா்கள் துணை ஆணையரிடம் சென்று திருவிழா விவரங்களை தெரிவித்துவிட்டு கோயில் கருப்பண சுவாமி சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.