செய்யாறு: செய்யாறு அருகே தனியார் கம்பெனி பேருந்து மோதியதில் ஆடு வியாபாரிகள் 2 பேர் இறந்தனர். இந்த பரிதாப சம்பவம் திங்கட்கிழமை நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பப் பிள்ளை (75), இவரது நண்பர் உத்திரமேரூர் வட்டம் மானாமதி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42). இவர்கள் இருவரும் ஆடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் வியாபார விஷயமாக திங்கள்கிழமை காலை காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் நெடுங்கல் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
அப்போது சுங்குவார்சத்திரத்தில் இருந்து பொன்னூர் நோக்கி தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் கம்பெனி பேருந்து சாலையோரம் நின்றவர்கள் மீது மோதியுள்ளது.
இதில் எல்லப்பப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த கோவிந்தராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 அவசர ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து இறந்த எல்லப்பப் பிள்ளையின் மகன் மச்சேந்திரன் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநரான வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (42) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!

நாகபந்தம் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய்யும், உதயநிதியும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்! பெ. சண்முகம் கண்டனம்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


