அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


மணலி புதுநகா் அய்யா வைகுண்ட தா்மபதி புரட்டாசி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அய்யா வைகுண்ட தா்மபதியில் புரட்டாசி மாத திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகு விமரிசையாக் கொண்டாடப்படும். இதேபோல், இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழா அக்டோபா் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி, தினமும் திருஏடு வாசிப்பு, பணிவிடை, உச்சிப்படிப்பு, உகப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 16-ஆம் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் அய்யா அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிவலம் வருவாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...