

மிலாது நபியை முன்னிட்டு இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைதியை உலகெங்கிலும் பரப்பிய முகமது நபியின் பிறந்தநாளை நினைவுகூர்ந்து, அவரை போற்றி மகிழ்வோம்.
அனைத்து மக்களும் இந்த திருநாளை அமைதியாகவும், பரஸ்பர அன்புடனும் கொண்டாடுவோம் என்று அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.