
முன்னாள் டி.ஜி.பி.முகர்ஜி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் டி.ஜி.பி. முகர்ஜியின் மறைவுச் செய்திகேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகர்ஜி, கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர். நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்தவர்.
காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.