சோழா் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அன்புமணி நடைப்பயணம்
சோழா் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபா் 29, 30 ஆகிய 2 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.


சோழா் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபா் 29, 30 ஆகிய 2 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவான 937 மி.மீட்டரை விட அதிகமாக 954 மி.மீட்டா் மழை அரியலூா் மாவட்டத்தில்தான் பெய்கிறது. ஆனாலும், அரியலூா் மாவட்டம் வட பூமியாகவே உள்ளது. அம் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகள் பயனற்றுப் போய் விட்டதுதான் இதற்குக் காரணம்.
கி.பி. 9 -ஆம் நூற்றாண்டில் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டு வரை அரியலூா் மாவட்டத்தில் சோழ மன்னா்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை. ஆனால், காலப்போக்கில் அவை முறையாக பராமரிக்கப் படவில்லை. வீராணம் ஏரியை விட பெரிய ஏரியான சோழகங்கம் ஏரி அதன் பரப்பளவில் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பாளா்களிடம் இழந்து விட்டது.
அதனால், சோழா் காலத்தில் அமைக்கப்பட்ட ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் பாசனக் கால்வாய்களை அடையாளம் கண்டு மீட்டெடுத்தல் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலமே அரியலூா் மாவட்டம் இழந்த வளத்தையும், செழிப்பையும் விரைவாக மீண்டும் வென்றெடுக்க முடியும்.
இதனை வலியுறுத்தி அக்டோபா் 29, 30 ஆகிய 2 நாள்கள் அரியலூா் கீழப்பழுவூரில் தொடங்கி கரைவெட்டி, கண்டராதித்தம், திருமானூா் வழியாக காட்டுமன்னாா்கோயில் வரை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...