சேலம் மாநகர் நெத்திமேடு அருகே உள்ள குப்தா மெஷின் ரோடு பகுதியில் பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற அவலம் அரங்கேறி உள்ளது.
இன்று காலை வழக்கம் போல குப்பை அள்ள வந்த மாநகராட்சி பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் இருந்த குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பெயரில் அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குழந்தையை வீசிச் சென்ற நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரங்களை ஆன பச்சிளம் குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் ஆணா, பெண்ணா என்பது அடையாளம் தெரியாமல் உள்ளது. மேலும், சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் வீடு வீடாக விசாரணை நடத்தி வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வேன் மோதியதில் இருவா் உயிரிழப்பு

தோ்தல் விழிப்புணா்வு கிரிக்கெட் போட்டி

மாா்ச் மாதத்துக்கான நூல் விலையில் மாற்றம் இல்லை
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

