அக். 15ல் சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
அக். 15ல் சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!
Published on
Updated on
1 min read

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ கல்லூரியில் வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது. 

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் அறிவிப்பு: 

சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15.10.2022 அன்று இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் (THE NEW COLLEGE)  நடைபெற உள்ளது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்களால் 40,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. 

இம் முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். 

மேலும் இம்முகாமில் சிறப்பு நேர்வாக உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு பல்வேறு கல்வித் தகுதிகளை உடைய பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள வரும் உடல் தகுதியுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து நபர்களும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக்குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப் புரிந்து தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர்  கொ.வீரராகவராவ், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com