வங்கி வைப்புத் தொகை வட்டி விகிதம் உயர்கிறதா?

திருவிழாக்கால கடன் பட்டுவாடா அதிகரிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் வங்கிகளின் ரொக்க கையிருப்பு சரிந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவிழாக்கால கடன் பட்டுவாடா அதிகரிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி நடவடிக்கையால் வங்கிகளின் ரொக்க கையிருப்பு சரிந்துள்ளது.

வங்கிகள் திரட்டும் டெபாசிட் தொகை(வைப்புத் தொகை) 9.2% ஆக மே மாதம் அதிகரித்துள்ள நிலையில், வங்கிகள் வழங்கியுள்ள கடன் 16.4% ஆக அதிகரித்துள்ளது.


கனரா வங்கியின் நிரந்தர வைப்புத்தொகை

கனரா வங்கி சமீபத்தில் ரூ.2 கோடிக்கு குறைவான நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. கனரா வங்கி 666 நாள்களுக்கு சிறப்பு நிலையான வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் படி, 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் மூத்த குடிமக்கள் இந்த வைப்புத்தொகையில் 7.5% பெறுவார்கள்.  இந்த சிறப்பு கால வைப்புத் திட்டம் ரூ.2 கோடிக்கும் குறைவான தொகைக்கானதாக உள்ளது.

தனியார் வங்கிகளின் நிரந்தர வைப்புத் தொகை

தனியார் வங்கிகளில், பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஆர்பிஎல் வங்கி ஆகியவை சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

பந்தன் வங்கியின் நிரந்தர வைப்புத் தொகை

18 மாதங்களுக்கு மேல் முதல் 2 ஆண்டுகளுக்குள் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50%.

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குள் பொது வாடிக்கையாளர்களுக்கும் 7.% மூத்த குடிமக்களுக்கு 7.50%.

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவானவர்கள் - பொது வாடிக்கையாளர்களுக்கு 7.00% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.50%.

750 நாட்களில் முதிர்வடையும் வைப்புத் தொகைகளுக்கு, RBL வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.75% வழங்குகிறது.

சிறு நிதி வங்கிகளின் நிரந்தர வைப்புத் தொகை

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை நிரந்தர வைப்புத் தொகைக்கு 7.5% வட்டியை வழங்குகின்றன. ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் முதலீடு செய்யும் போது முதலீட்டு காலம் 1,000 நாள்களாகும். இதேபோல், உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியில் கொடுக்கப்பட்ட வட்டி விகிதங்களைப் பெற முதலீட்டு காலம் 525 நாட்கள் மற்றும் 990 நாட்கள் ஆகும்.

சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் 999 நாள்கள் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகைக்கு 7.49% வட்டி வழங்குகிறது.

மத்திய வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன், ரூ.5 லட்சம் வரையிலான நிலையான வைப்புத் தொகை முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

ரொக்க பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகையை திரட்டுவதில் வங்கிகள் தீவிரம் காட்டக்கூடும்.

வைப்புத் தொகை திரட்டுவதை வங்கிகள் தொடங்கினால் வைப்புத் தொகைகளுக்கான வட்டி விகிதங்கள் உயர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com