தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடக்கம்!

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். 
தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வு தொடக்கம்!
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார். 

தொடங்கிவைத்து அவர் கூறியதாவது, 

பி.எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. தொடர்ந்து அடுத்த 5 நாள்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. 

இந்தாண்டு 2,040 பி.எட் படிப்பு இடங்களுக்கு 5,138 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 

முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. 

தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகள், 14 உதவிபெறும் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் 2,040 பி.எட் படிக்கான இடங்கள் உள்ளதாக அவர் கூறினார். 

மேலும், 2023 முதல் பி.எட் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

நவம்பர் 1-இல் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com