ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்!

சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ரூ.100 கட்டணத்தில் விருப்பம் போல் பயணம் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்!
Published on
Updated on
1 min read

சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ரூ.100 கட்டணத்தில் விருப்பம் போல் பயணம் செய்யும் சலுகை திட்டம் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவித்து வருகிறது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் பயணம் செய்வதற்கான சலுகை திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 

அதாவது பயணிகள் பயணத்தை தொடங்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூ.100 கட்டணமும், பயண அட்டைக்கு ரூ.50 கட்டணம் செலுத்து நாள்தோறும் பயணத்திற்கான சலுகை டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். 

ஒவ்வொரு நாளும் காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்களுகம் சென்று வரலாம். 

கடைசி பயணத்தை முடிக்கும் மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பயண அட்டையை திருப்பி கொடுத்துவிட்டு ரூ.50 திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், இந்த பயண சலுகை அட்டையை வாங்கியவர்களே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் யாரும் பயன்படுத்துக்கொள்ள முடியும்.

இதேபோன்று ரூ.2,500 செலுத்தி மாதாந்திர பயண சலுகை கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம்.  அதனுடன் ரூ.50 பயண அட்டைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுவும் மாத முடிவில் திருப்பி வழங்கப்படும். இந்த பயண சலுகை கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம்.

மேற்கண்ட பயண சலுகைகள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள், கூரியர் நிறுவனத்தினர் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் கூறினர். 

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ தூரத்துக்கு 42 ரயில்கள் நாள்தோறும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், மறஅற சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com