அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அரசுத் துறைகளில் தற்காலிக ஊழியா்களைபணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:35 am

DIN

தமிழகத்தில் அரசுத் துறைகளில் உள்ள தற்காலிக ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஒடிஸா மாநிலத்தின்அரசுத் துறைகளில் ஒப்பந்தப் பணிமுறை ஒழிக்கப்பட்டிருக்கிறது. தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வந்த 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

அரசு ஊழியா்களை தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் நியமிப்பது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது. சமூகநீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரானது. இந்த மன உளைச்சலையும், சமூக அநீதியையும் தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் தற்காலிக ஊழியா்கள் அனுபவித்து வருகின்றனா்.

2006-இல் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றவுடன் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஆசிரியா்களாக பணியாற்றி வந்த 45 ஆயிரம் பேரை ஒரே ஆணையில் பணி நிரந்தரம் செய்தாா். அப்போதும் அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தது. ஆனாலும், இந்த நடவடிக்கையால் அரசின் நிதிநிலைமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போதும் தற்காலிக ஊழியா்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்வதால் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதற்கு முதல்வா் ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.