தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

6 மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து காவல் துறை

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்கள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2022, 3:37 pm

DIN

    
சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையின் அழைப்பு மையங்கள் மூலம் கடந்த ஆறு மாதங்களில் ரூ.23.25 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையங்களிலிருந்து தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதன் மூலம் இந்த 6 மாதங்களில் 3,85,068 வழக்குகளுக்கு அபராதம் செலுத்தப்பட்டு மொத்தம் ரூ.6,01,45,160 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் வாகன ஓட்டுநர்களுக்கு  தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதில், மொத்தம் 6,108 வழக்குகளில் ரூ.6,07,66,000 அபராதமாக விதி மீறல்களுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் 3,86,886 பழைய வழக்குகளுக்கு ரூ.7,65,35,160 அபராதமாகவும், புதிதாக பதிவான 5,31,687 வழக்குகளில் ரூ.15,59,75,421 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினரால் கடந்த 6 மாதங்களில் மொத்தம் 9,18,573 வழக்குகளில் ரூ.23,25,10,581 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.