அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இபிஎஸ் தரப்பு நாளை(அக்.19) உண்ணாவிரதப் போராட்டம்

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அறிவிக்காததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

News image
எடப்பாடி கே. பழனிசாமி (கோப்புப் படம்)
Updated On :18 அக்டோபர் 2022, 7:52 am

DIN

எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அறிவிக்காததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர் செல்வத்துக்கு பதிலாக, ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்குள் முழக்கங்கள் எழுப்பினர். 

இதையடுத்து, அமைச்சர் துரைமுருகனின் வலியுறுத்தலுக்கு ஏற்ப பழனிசாமி அணியினர் இன்று ஒருநாள் அவையில் பங்கேற்க தடை விதித்து அவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். 

இதனால், அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் அனைவரும், அவைத் தலைவருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு அவைக்கு வெளியே தர்னாவில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவரைக் கண்டித்தும் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நியமிக்க வலியுறுத்தியும் இபிஎஸ் தரப்பினர் நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நாளை(புதன்கிழமை)  உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். 

நாளை காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.