ஜெயலலிதா இறந்த திதியால் அம்பலமான சதி: பஞ்சாங்கம் இணைப்பு

ஜெயலலிதா இறந்தது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி என்று தெரிய வந்திருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த திதியால் இந்த சதி அம்பலமானதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் விவரிக்கிறது.
ஜெயலலிதாவின் வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து மனு
ஜெயலலிதாவின் வரி பாக்கியை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து மனு

சென்னை: ஆணையத்தின் விசாரணையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி என்று தெரிய வந்திருப்பதாகவும், ஜெயலலிதா இறந்த திதியால் இந்த சதி அம்பலமானதாகவும் ஆறுமுகசாமி ஆணையம் விவரிக்கிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜெயலலிதா இறந்த நேரம் அதிகாரப்பூர்வமாக 05.12.2016 அன்று இரவு 11.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும், மருத்துவப் பணியாளர்களின் சாட்சியங்களுக்கும் பெருமளவில் வேறுபாடு உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும்வகையில், மறைந்த முதல்வரின் மருமுகன் தீபக்கின் சாட்சியத்தின்படி, மறைந்த முதல்வரின் மரண நேரத்தை மிகவும் துல்லியமாக நிர்ணயிக்க முடியும். 

நோயுற்ற மறைந்த ஜெயலலிதாவை அருகிலிருந்து கவனித்துக் கொண்ட மற்றும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நடந்த நிகழ்வுகளையும் முன்னேற்றங்களையும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையையும் அவ்வப்போது முழுமையாகத் தெரிந்த அவரின் ஓட்டுநர் மற்றும் பூங்குன்றன், ஆகிய இருவரின் தகவலின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி சஷ்டி திதி மதியம் 3 மணி முதல் 3.30 மணி வரை என மறைந்த முதல்வரின் இறந்த நேரத்தைக் கருத்தில் கொண்டு அவர் இறந்த முதலாம் ஆண்டு நினைவை அனுசரித்தார் என்பது அவரது சாட்சியமாகும்.

இது விசாரணை ஆணையத்தில் இணைக்கப்பட்டுள்ள பஞ்சாங்கம்

தொடர்ந்து, இந்த ஆணையத்தின் பார்வையில், மறைந்த முதல்வர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு காலமானார். சிபிஆர் மற்றும் ஸ்டெர்னோடமி பயனற்றவை என்பதுடன், அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தாமதத்திற்கான காரணமாக தந்திரமாக பயன்படுத்தப்பட்டன.

ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் அவரது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்திருந்தார் என்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜெயலலிதா மரணமடைந்த நிதி மூலமாக அவர் மரணமடைந்தது தாமதமாக அறிவிக்கப்பட்ட சதி அம்பலமாகியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com