கோப்புப் படம்
கோப்புப் படம்

கோவை சிலிண்டர் வெடிப்பு: 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்டம் உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

5 பேர் மீது கூட்டுச் சதி செய்தது, இரு பிரிவுகள் இடையே மோதல் உண்டாக்குதல், உபா உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

உயிரிழந்த ஜமேஷா முபின் பயன்படுத்திய கார் சுமார் 10 பேரிடம் மாறியது விசாரணையின் கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தில் உடனடியாக துப்பு துலக்கியதாகவும், இதனால் துரிதமாக அடுத்தடுத்த விசாரணை நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

காரிலிருந்த சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு முலப்பொருள்கள் சிக்கிய நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். 

சென்னையில் இருந்து  தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா  (25) , முகமது அசாருதீன் வயது (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் வயது (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26).  இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர்  பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களை கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com