கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மூன்று நாள்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினரும் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில், ஆணிகள், கோழிகுண்டுகள் ஆகியவை எடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் 5 பேரையும் விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோவை கார் வெடிவிபத்து: என்ஐஏ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை
இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

இந்த முறை கோப்பை மிஸ் ஆகாது; பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை!
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

