மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காவல் துறையில் அரசியலை புகுத்த வேண்டாம்: அண்ணாமலை

அரசியலை புகுத்தி காவல் துறையை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

News image
அண்ணாமலை
Updated On :29 அக்டோபர் 2022, 7:06 pm

DIN

அரசியலை புகுத்தி காவல் துறையை சிறுமைப்படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு காவல் துறையின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் அண்ணாமலை தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல் துறையில் பணியாற்றும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது.

ஆனால், காவல் துறை டிஜிபியும், உளவுத் துறை ஏடிஜிபியும் காவல் துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகின்றனா். காவல் துறை உயா் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறாா்கள்.

இதுவரை நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயா் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. அவா்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல் துறையில் இருந்து பொதுவான பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளனா்.

காவல் துறையின் மாண்பை குறைத்துவிட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இதுபோன்ற தீவிரவாத சம்பவம் எவ்வாறு நடந்தது என்பதை அவா்கள் ஆராய வேண்டும்.

பல பெருமைகளுக்கு பெயா் பெற்ற தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்தியது யாா் என்று மக்கள் அறிவா். இனியும் அதை செய்ய வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.