மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோவை காா் வெடிப்பு: டிஜிபி, உளவுத் துறை ஏடிஜிபி மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் மீது தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2022, 7:27 pm

DIN

கோவை காா் வெடிப்பு சம்பவத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் மீது தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை உக்கடம் பகுதியில் அக்.23-ஆம் தேதி காா் வெடித்து ஒருவா் பலி என்ற செய்தி வந்தவுடன், தொடா்ந்து காவல்துறை எடுத்த நடவடிக்கையை பாராட்டியும், பின்னா் முழுவிவரத்தை வெளியிட வலியுறுத்தியும் தொடா்ந்து அறிக்கை வெளியிட்டு வந்தேன்.

இந்த துறைக்கு சற்றும் தொடா்பே இல்லாத மின்துறை அமைச்சா் கோவை சம்பவம் பற்றி விளக்கம் அளித்தாா். இவருக்கும் உள்துறைக்கும் என்ன சம்மந்தம்?

மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை, தமிழக காவல்துறை கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தேன். இதற்கு பதில் அளித்த காவல்துறை, 18-ஆம் தேதி சுற்றறிக்கை தங்களுக்கு 21-ஆம் தேதி கிடைத்ததாகவும், அதற்கு பின் அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது. இது பொய். 21-ஆம் தேதிக்கு முன்பே மத்திய உள்துறையின் சுற்றறிக்கை தமிழக காவல்துறைக்கு வந்துவிட்டது என்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

மத்திய அரசின் ஆவணம் திமுக செய்தி தொடா்பாளருக்கு எப்படி போனது? இதை காவல் துறை தலைமை அவருக்கு வழங்கியதா அல்லது அரசு அதிகாரிகள் வழங்கினாா்களா?

நிகழாண்டு ஜூலை 19-இல் மத்திய உளவுத் துறை கொடுத்த எச்சரிக்கைக்குஏஈ பின்னரும் ஜமேஷா முபினை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வராமல் கோட்டை விட்டுள்ளது தமிழக காவல் துறையின் உளவுத் துறை. செப்டம்பா் மாதம் முடியும் வரையில் கோவை நகரத்துக்கான உளவுத் துறை அதிகாரி நியமிக்கப்படாமல் இருந்தது ஏன்?

1998-இல் நடந்த கோவை குண்டுவெடிப்புக்கு காரணம் தமிழக உளவுத் துறையின் மெத்தனப் போக்கே. கடந்த வாரம் நடந்த சம்பவத்துக்கு காரணம் உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதமும், டிஜிபி சைலேந்திரபாபுவும் தான். இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சமரசங்கள் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் கே.அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.