சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் காராமணி திட்டுப் பகுதியில் விவசாய நிலங்களில் விசாயிகள் விவசாயம் செய்துவருகின்றனர், அங்குள்ள விவசாய தோட்டங்களின் அருகே உள்ள கல்வராயன் வனப்பகுதியில் இருந்து காட்டுமாடுகள், காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்து வருகிறது.
இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?
இது குறித்து ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் மாவட்ட ஆட்சியர் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரிடமும் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கம்போல் இன்று அதிகாலையில் 10க்கும் மேற்பட்ட காட்டுமாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து மருதமுத்து-வின் விவசாயத் தோட்டத்தில் உள்ள மஞ்சள், சோளம் ஆகிய விளை பயிர்களுக்குள் புகுந்து பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளது.
இதையும் படிக்க.. இவர்களைப் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம்: அறிவித்தது என்ஐஏ
வனப்பகுதியில் இருந்து விவசாய தோட்டத்துக்குள் வனவிலங்குகள் நுழையாதவாறு தமிழக அரசும் வனத்துறையினரும் பாதுகாப்பு வேலி அமைத்து தர வேண்டும் என்றும் இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


