முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் அறிவிப்பு வெளியானது!

2018-19, 2019-20ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

2018-19, 2019-20ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரா்கள், 2 சிறந்த பயிற்றுநா்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ. 10,000 மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒவ்வொரு நிதியாண்டிலும் வழங்கி வருகிறது.

விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துனா், ஒரு நிா்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளா் (ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவா்), ஒரு ஆட்ட நடுவா், நடுவா், நீதிபதி ஆகியோா்களுக்கு முதலமைச்சா் மாநில விளையாட்டு விருது வழங்கப்படுகிறது. இவா்களுக்கு மேற்கண்ட விருதுக்கு ரூ. 10,000-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவா்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

2018-2019 விருது பெற்றவர்கள்: 

சிறந்த விளையாட்டு வீரர்கள் 

  1. எஸ். பிருத்வி சேகர் - லான் டென்னிஸ்
  2. ஜீவன் நெடுஞ்செழியன்- டென்னிஸ்


சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் 

  1. பி. ஸ்ரீ நிவேதா - துப்பாக்கி சுடுதல்
  2. சுனைனா சாரா குருவில்லா - ஸ்குவாஷ்


சிறந்த பயிற்சியாளர்கள்

  1. சத்குர்தாஸ்- துப்பாக்கி சுடுதல்
  2. கோகிலா - தடகளம்
  3. சி.ராஜேஷ் கண்ணா - கால்பந்து


சிறந்த விளையாட்டு நடத்துனர்

  1. எம்.பி. முரளி - பீச் வாலிபால்


சிறந்த நடுவர் 

  1. வி.பி.தனபால் - கூடைப்பந்து


சிறந்த நிர்வாகி

  1. தமிழ்நாடு கூடைப்பந்து அமைப்பு 

2019-2020 விருது பெற்றவர்கள்: 


சிறந்த விளையாட்டு வீரர்கள் 

  1. பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- லான் டென்னிஸ்
  2. ஆர்.மோகன் குமார் - தடகளம்

சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்

  1. பி. அனுஷியா பிரியதர்ஷினி- டேக்வாண்டோ
  2. எஸ்.செலினா தீப்தி - டேபிள் டென்னிஸ்

சிறந்த பயிற்சியாளர்கள்

  1. கே.எஸ்.முகமது நிஜாமுதீன் - தடகளம்
  2. எஸ்.கோகிலா - கால்பந்து

சிறந்த விளையாட்டு நடத்துனர்

  1. ஆர்.ராமசுப்ரமணியன் - பால் பேட்மிண்டன்
  2. ஏ.ஆரோக்கியா மெர்சி - வாலிபால் 

சிறந்த நடுவர் 

  1. டி.சுந்தரராஜ் - கபடி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com