கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதி குறித்த ஓவியங்கள்: தெற்கு ரயில்வே அனுமதி

கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதி வாழ்க்கை வரலாறு குறித்த ஒவியங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. செப்.11இல் ஓவியங்கள் வரையும் பணி தொடக்க விழா நடைபெறுகிறது.
கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதி குறித்த ஓவியங்கள்: தெற்கு ரயில்வே அனுமதி

அம்பாசமுத்திரம்: கீழக்கடையம் ரயில் நிலையத்தில் பாரதி வாழ்க்கை வரலாறு குறித்த ஒவியங்கள் அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. செப்.11இல் ஓவியங்கள் வரையும் பணி தொடக்க விழா நடைபெறுகிறது.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் கடையம்.  மகாகவி பாரதியார் தமது வாழ்நாளில் 2 ஆண்டுகளை கடையத்தில் கழித்துள்ளார். இதை பெருமைப்படும் வகையில் உலகிற்கும் வளரும் தலைமுறைக்கும் தெரிவிக்கும் வகையில் சென்னை சேவாலய நிறுவனம் கடையம் அரசு நூலக வளாகத்தை சுமார் 3 கோடி மதிப்பில் புதுப்பித்து அதில் செல்லம்மாள் பாரதி கற்றல் மையம் மற்றும் செல்லம்மாள் - பாரதியின் முழுஉருவச் சிலையையும் அமைத்துள்ளனர்.

மேலும் பாரதி மற்றும் செல்லம்மாள் வாழ்ந்த காலத்தை உலகிற்குத் தெரியப்படுத்தும் வகையில் கீழக்கடையம் ரயில் நிலையத்தில் செல்லம்மாள், பாரதி ஆகியோரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் படங்கள் வரைய ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரியிருந்தனர். கோரிக்கையை பரிசீலித்த ரயில் நிர்வாக வணிகப் பிரிவு மூத்த மண்டல மேலாளர், அதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதையடுத்து செப். 11 விவேகானந்தர் பிறந்த நாளன்று கீழக்கடையம் ரயில்நிலையத்தில் பாரதி ஓவியங்கள் வரையும் பணிகள் தொடக்க விழா நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com