/

நீதிமன்றத்தில் ரெளடியை கொலை செய்ய முயன்ற வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் ரெளடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:09 am

DIN

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் ரெளடியை கொலை செய்ய முயன்ற வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பல்லாவரம் தென்னேரி பகுதியில் வசிக்கும் ரெளடி பாலமுருகன் என்ற பாலாவை, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கின் விசாரணைக்கு ஆஜா்படுத்துவதற்காக சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் கடந்த 5-ஆம் தேதி அழைத்து வந்தனா். சிறை வளாகத்துக்குள் பாலா வரும்போது, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் மீது பெப்பா் ஸ்பிரே அடித்து பாலாவை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றது.

ஆனால், உஷாரான போலீஸாா், பாலாவை பாதுகாப்பாக நீதிமன்றத்துக்குள் அழைத்துச் சென்றனா். அதேவேளையில் கொலை செய்ய கத்தி,அரிவாளுடன் வந்த 3 பேரை கையும்களவுமாக பிடித்தனா். இருவா் தப்பியோடிவிட்டனா். பிடிபட்ட 3 பேரையும் போலீஸாா், கோட்டூா்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள், சென்னை செனாய் நகரை சோ்ந்த அருண்பிரசாத், அப்துல் மாலிக், சக்திவேல் என்பதும், முன் விரோதம் காரணமாக பாலாவை கொலை செய்ய வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக ஷெனாய் நகா் பாரதிபுரத்தைச் சோ்ந்த திருநீலகண்டன் (20) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.