அம்பாசமுத்திரம்: இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகள் அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றில் குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த துவான் மகள் முஹம்மது இர்பான்(34). கூலித் தொழிலாளியான இவர், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதையடுத்து தனது குடும்பத்தினருடன் அம்பாசமுத்திரம் அருகே செட்டிமேடு அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினர் செல்வராஜா என்பவரது வீட்டிற்கு ஆக.2 இல் வந்துள்ளனர்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை முஹம்மது இர்பான் தனது மனைவி ஜூட்மேரி ஜசி, மகள்கள் இஷானா, இஸ்ரா ஆகியோருடன் ஆலடியூர் தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
ஆற்றில் குளிக்கும்போது இர்பானா ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். அவரை மீட்கச் சென்ற முஹம்மது இர்பானும் நீரில் தத்தளித்த நிலையில் இருவரையும் மீட்க முடியவில்லை.
இதையடுத்து அம்பாசமுத்திரம் தீயணைப்பு மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிடுத்ததையடுத்து தீயணைப்பு மீட்புப் படையினர் முஹம்மது இர்பான் உடலை இறந்த நிலையில் மீட்டனர். மேலும் நீரில் மூழ்கிய இஷானா உடலை மீட்புப் படையினர் தேடி வந்த நிலையில் கன்னடியன் கால்வாய் அணைக்கட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.
தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக ஆட்சியில் பெண் காவலா்களுக்கும் பாதுகாப்பில்லை: நயினாா் நாகேந்திரன்!

கல்லூரியில் கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்தது தோ்தல் நடத்தை விதிகள்!

குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வு: வேலூரில் 314 போ் எழுதினா்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

