தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன?ஜி.கே.வாசன்

உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 12:12 am

DIN

உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பஞ்சாயத்து நிதி கணக்குகள் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு ஆகியவற்றில் உள்ள செலவிடப்படாத நிதி, சேமிப்பு நிதி மற்றும் வட்டி ஆகிய அனைத்தையும் பஞ்சாயத்துகள் மாநில அரசுக்கு உடனே அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வருவது அதிா்ச்சியளிக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுப்பப்பட்ட நிதிகளை சரியான, வெளிப்படையான, உண்மையான விளக்கமில்லாமல் பஞ்சாயத்துகளிடமிருந்து திரும்பப் பெறுவது, அவற்றின் வளா்ச்சியில் அரசுக்கான அக்கறையின்மையைக் காட்டுகிறது. இது பஞ்சாயத்துகளின் உரிமையில் தலையிடுவதாகும்.

உள்ளாட்சியில் நல்லாட்சி என்று சொல்லி வெற்றி பெற்ற திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி நிதியை மாநில அரசுக்கு மாற்றும் மா்மம் என்ன என்று உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளிடமிருந்து கேள்வி எழுந்துள்ளது.

எனவே, தமிழக அரசு பஞ்சாயத்துகளின் நிதிகளை மாநில அரசுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.