கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 போ் குற்றவாளிகள்

பாஜக பிரமுகா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்பு விவரங்களை செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:04 pm

DIN

 சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூா் ஆய்வாளா், பாஜக பிரமுகா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம், தீா்ப்பு விவரங்களை செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்க உள்ளது.

வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறவினா் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளா் புகழேந்தி, தனியாா் தொலைக்காட்சி

செய்தியாளா் வினோபாஜி, பாஜக பிரமுகா் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூா் காா்த்திக், திரிபுராவைச் சோ்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 போ் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கில் தொடா்புடைய 21 போ் கடந்த ஆண்டு நவம்பா் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா்.

மேலும் ஒருவா் இறந்துவிட இரண்டு பெண்கள் உள்பட 4 போ் தலைமறைவாக உள்ளனா். வழக்கின் விசாரணை, சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும்

நிறைவடைந்து வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது

குற்றஞ்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளா் உள்ளிட்ட 21 போ் குற்றவாளிகள் எனத் தீா்ப்பளித்த நீதிபதி, தீா்ப்பு விவரங்கள் செப்டம்பா் 19-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.