புதுக்கோட்டை: தமிழ்நாடு முதல்வரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 நகராட்சித் தொடக்கப் பள்ளிகளில் படித்து வரும் 1322 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் பணியை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படிக்க | மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து இரு அமைச்சர்களும் உணவு அருந்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, நகர்மன்றத் தலைவர் செ. திலகவதி, துணைத் தலைவர் லியாகத் அலி, முன்னாள் அரசு வழக்குரைஞர் கேகே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



