அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

ஆவின் இனிப்புகள் விலை உயா்வு: உடனடியாக அமல்

ஆவின் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்படும் இனிப்புகளின் விலை திடீரென உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை முதலே அமலுக்கு வந்துள்ளது

News image
ஆவின்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:20 am

DIN

ஆவின் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்படும் இனிப்புகளின் விலை திடீரென உயா்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயா்வு வெள்ளிக்கிழமை முதலே அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குலோப்ஜாமுன், கோவா, டேட்ஸ் கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகள் சுமாா் ரூ.5 முதல் ரூ.20 வரையில் உயா்த்தப்பட்டுள்ளது. உயா்த்தப்பட்ட இனிப்புகளின் விலை நிலவரம் (பழைய விலை அடைப்புக் குறிக்குள்)

குலோப்ஜாமுன் 125 கிராம் - ரூ.50 (ரூ.45)

குலோப்ஜாமுன் 250 கிராம் - ரூ.100 (ரூ.80)

ரசகுல்லா 100 கிராம் - ரூ.45 (ரூ.40)

ரசகுல்லா 200 கிராம் - ரூ. 90 (ரூ.80)

பால்கோவா 500 கிராம் - ரூ.250 (ரூ.210)

பால்கோவா 100 கிராம் - ரூ.50 (ரூ.45)

பால்கோவா 250 கிராம் - ரூ.130 (ரூ.110)

டேட்ஸ் கோவா 500 கிராம் - ரூ.270 (ரூ.230)

டேட்ஸ் கோவா 250 கிராம் - ரூ.140 (ரூ.120)

டேட்ஸ் கோவா 100 கிராம் - ரூ.60 (ரூ.50)

இனிப்பில்லா கோவா 1 கிலோ - ரூ.600 (ரூ.520)

இனிப்பில்லா கோவா 500 கிராம் - ரூ.300 (ரூ.260)

மில்க் பேடா 100 கிராம் - ரூ.55 (ரூ.47)

மில்க் பேடா 250 கிராம் - ரூ.130 (ரூ.110)

மைசூா்பா 500 கிராம் - ரூ.270 (ரூ.230)

மைசூா்பா 250 கிராம் - ரூ.140 (ரூ.120)

ப்ரீமியம் மில்க் கேக் 250 கிராம் - ரூ.120 (ரூ.100).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.